உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காட்சி.

திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் - கோவை சரக டி.ஐ.ஜி. பங்கேற்பு

Published On 2023-04-13 07:50 GMT   |   Update On 2023-04-13 07:50 GMT
  • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
  • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News