உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்து வருமானம் ஈட்டலாம் - வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-09-07 08:20 GMT   |   Update On 2022-09-07 08:20 GMT
  • 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

குடிமங்கலம் :

குடிமங்கலம் வட்டாரத்தில் உலக தென்னை தினத்தினை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.இதில், வேளாண் உதவி இயக்குனர் வசந்தா,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ந்தேதி உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பான, 22 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில், 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தென்னை, வட்டார விவசாயிகளுக்கு வாழ்வாதார பயிராக உள்ளது. நிரந்தர பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் இருப்பிலுள்ள, தென்னை, பருத்தி, பயறு வகை மற்றும் தானிய வகை உரங்கள் , மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிபயறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை விதை இருப்பு குறித்தும், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து பேசினார். பொங்கலூர் அறிவியல் மைய பேராசிரியர் கலையரசன், தென்னையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், வருவாய் அதிகரிக்க தென்னந்தோப்புக்குள் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினார்.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், தென்னையில் ஊடுபயிராக மகா கனி, மிளகு ஆகியவற்றை சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கலாம் என்றார்.

முன்னாள் வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம், தென்னை மரத்திற்கு இட வேண்டிய பேரூட்டம், நுண்ணுாட்ட உரங்களின் அளவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், தென்னந்தோப்புக்குள் பசுந்தாள் உரமாக பயன்படும் தக்கை பூண்டு பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கக சத்தின் அளவு அதிகமாவதோடு களையும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.கருத்தரங்கினை முன்னிட்டு அலுவலக வளாகத்தில், தென்னை சார் பொருட்களைக்கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News