உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் 212 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி

Published On 2022-10-18 05:19 GMT   |   Update On 2022-10-18 05:19 GMT
  • மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.
  • விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர்.

திருப்பூர் :

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பத்திருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர். கடை அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்றும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.

ஆய்வுக்கு பின் மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 84 பேருக்கு மாநகராட்சியில் இருந்து தடையின்மை சான்று பெற்று வழங்கியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 26 பேருக்கு தடையின்மை சான்று கிடைத்த உடன் அனுமதிக்கப்படும். இதேபோல் திருப்பூர் புறநகர் பகுதிகளில் 132 பேரில் 128 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News