உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிகளில் படித்த 28 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம்
- மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
- 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 217 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விரும்புவோருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 73 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.