உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வினியோகம்

Published On 2023-05-11 05:43 GMT   |   Update On 2023-05-11 05:43 GMT
  • வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
  • விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

 திருப்பூர் :

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News