உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த போலீசார்
- பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
- சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார்.
பல்லடம் :
பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு கோவை - திருச்சி மெயின் ரோட்டில் நால்ரோடு பகுதியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார். அப்போது எதிரே வந்த சிறிய சரக்கு வேனில் மோதி கீழே விழுந்தார்.இதையடுத்து அவரை அமுக்கிப் பிடித்த போலீசார் அவர்களது பாணியில் "கவனித்து" அவரை மீண்டும் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்பொழுது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.