உள்ளூர் செய்திகள்

போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில், துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா ஆகியோர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்திய காட்சி. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2022-09-01 04:31 GMT   |   Update On 2022-09-01 04:31 GMT
  • போலீசார் 24 மணி நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • 400-க்கும் மேற்பட்டவர்கள் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்

திருப்பூர் :

திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட முக்கிய இடங்களில் போலீசார் 24 மணி நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் முன் குமரன் ரோட்டில் தொடங்கியது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில், துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 400-க்கும் மேற்பட்டவர்கள் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பொதுமக்கள் எந்தவித பதற்றம் அடைய வேண்டாம். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags:    

Similar News