உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குறு, சிறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Published On 2023-04-21 04:35 GMT   |   Update On 2023-04-21 04:35 GMT
  • மின்துறை அமைச்சர், குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
  • பீக் ஹவர் கட்டணத்தில், 10 சதவீத கூடுதல் தொகை இம்மாதம் முதல் திரும்ப வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறு, சிறு நிறுவனங்கள் நேற்று நடப்பதாக அறிவித்திருந்த வேலை நிறுத்தப்போராட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான 'போசியா' ஒருங்கிணைப்பாளர்கள், ஜேம்ஸ், சுருளிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில், பீக் ஹவர் கட்டணம் தொடர்பாக டி.ஓ.டி., மீட்டரை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களே கொள்முதல் செய்து பொருத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

25 சதவீதமாக வசூலிக்கப்பட்ட பீக் ஹவர் கட்டணத்தில், 10 சதவீத கூடுதல் தொகை இம்மாதம் முதல் திரும்ப வழங்கப்படுகிறது. இதுவரை 17 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதர பரிந்துரைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். எனவே, கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவின்படி நேற்று நடைபெறவிருந்த, வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News