உள்ளூர் செய்திகள்

உடுமலை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-12-06 06:56 GMT   |   Update On 2022-12-06 06:56 GMT
  • 100 ஆண்டு பழமை வாய்ந்த இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை : 

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா 100 ஆண்டு பழமை வாய்ந்த இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.அப்போது சந்தனம்,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம்,பால்,மஞ்சள்,இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள்கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News