திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் உரம் விற்பனை செய்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு
- 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.
திருப்பூர் :
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.