உள்ளூர் செய்திகள் (District)

பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

குடிமங்கலம் அருகே ஊருக்குள் வராத அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

Published On 2023-03-07 07:58 GMT   |   Update On 2023-03-07 07:58 GMT
  • கினத்துப்ப்பட்டி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • பூளவாடி பிரிவில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆத்துகிணத்துப் பட்டி ஊராட்சி. ஆத்து கினத்துப்ப்பட்டி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி, குடிம ங்கலம் ஆத்துகிணத்து ப்பட்டி, வழியாக பூளவாடிக்கு தினமும் பஸ்கள் சென்று வருகிறது.

கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் முதியோர்,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். ஆத்துகிணத்துப்பட்டி ஊருக்குள் வரவேண்டிய பஸ் ஊருக்குள் வராமல் பூளவாடி பிரிவில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஊருக்குள் வராத பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் பஸ் ஊருக்குள் வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி யதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News