உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் புகார் எதிரொலி - அரிசி ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
- தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது.
- கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது.
திருப்பூர் :
பொங்கலூா் ஒன்றியம் மாதப்பூா் ஊராட்சி சிங்கனூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரித்துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அரிசி ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது. இந்த ஆலை உரிய உரிமம் இன்றி இயங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, பல்லடத்தில் உள்ள திருப்பூா் (தெற்கு) மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவி செற்பொறியாளா் வனஜா, சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டாா்.