பல்லடம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்க டி.எஸ்.பி.யிடம் பொதுமக்கள் மனு
- 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
- போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காமலும், வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோர் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியாவை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிரு ப்பதாவது:-
பல்லடம் அருகேஉள்ள பொங்கலூர் கண்டியன் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகள், கொள்ளை போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தை அணுகி குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர். இதுவரை போலீசார் எவ்வித நடவடி க்கையும் எடுக்காமலும் வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து குற்றச்சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி குற்றம் நடக்கும் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.