உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பேரணி
- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
- பள்ளி தலைமை ஆசிரியர் தேவகிருபா, ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவத்தை வளர்ப்போம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பேரணியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்திகோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் தேவகிருபா, ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.