மழை நீரால் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் ராசாத்தாள் குட்டை
- ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குட்டை உள்ளது.
- நொய்யல் கிளை வாய்க்கால் வாயிலாக வரும் மழைநீர் குட்டையில் நிரம்புகிறது.
அவிநாசி :
திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குட்டை உள்ளது. நொய்யல் கிளை வாய்க்கால் வாயிலாக வரும் மழைநீர் குட்டையில் நிரம்புகிறது. சமீபத்தில் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் ஓரிரு நாள் பெய்த மழையில் குட்டை நிரம்பி பார்வைக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஏராளான நீர்நிலைகள் உள்ளன. அவை ஆக்கிரமிப்பால் அடைபட்டும், சுருங்கியும் உள்ளன. அத்தகைய நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். அத்துடன் ராசாத்தாள் குட்டைக்கு மழைநீர் வரும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.இப்பகுதியில் தான் பூண்டி நகராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், ராசாத்தாள் குட்டையில் ஆண்டு முழுக்க நீர் நிரம்பியிருக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.