உள்ளூர் செய்திகள்

பந்தயத்தில் சீறிவரும் ஒரு ரேக்ளா வண்டியின் காட்சி.

தாராபுரத்தில் ரேக்ளா பந்தயம்

Published On 2023-09-18 10:44 GMT   |   Update On 2023-09-18 10:44 GMT
  • தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது
  • முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் வழ்ஙகப்பட்டது.

தாராபுரம்:

தாராபுரத்தை அருகேயுள்ள உப்பாறு அணை அருகே பூளவாடி_தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், சென்னிமலை, முத்தூர் ,ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி ,கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

200 மீட்டர் மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு 3/4 தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஐந்தாவது பரிசு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

300 மீட்டர் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு 3/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம்- கோப்பை வழங்கப்பட்டது.நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

உப்பாறு அணை அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை காண குண்டடம் ,கொடுவாய் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ,காங்கேயம் பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News