உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாகன ஆய்வாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

Published On 2023-04-19 05:39 GMT   |   Update On 2023-04-19 05:39 GMT
  • பழகுநருக்கான உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
  • பழகுநர் உரிமம் காலாவதியாகி விடக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

வீரபாண்டி :

திருப்பூரில் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீரபாண்டி பிரிவில் செயல்பட்டு வரும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநருக்கான உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆனந்தும், மோட்டார் வாகன ஆய்வாளராக நிர்மலாதேவியும் உள்ளார்கள்.இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் ஒரு ஆய்வாளர் மட்டுமே இருப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணியில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றால் பொதுமக்கள் பழகுநர் உரிமம் பெற முடியாத நிலை உள்ளது. மேலும் பழகுநர் உரிமம் பெறுபவர்களுக்கு ஒரு மாதம் கழித்து தேதி ஒதுக்கினால் பழகுநர் உரிமம் காலாவதியாகி விடக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே மோட்டார் வாகன ஆய்வாளர் காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News