உள்ளூர் செய்திகள்
உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
- கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக உள்ளன.
திருப்பூர்:
இந்திய உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது . கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்ற நிலையில் உயர் நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழிகளாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது .
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.