உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் சாக்கடையில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை
- வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் அமைந்துள்ளன.
- மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் ஏராளமான நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் இதர தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இந்தநிலையில் வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் சாக்கடைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி உள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்வோர் அவதி அடைகின்றனர். சாக்கடைகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
சாக்கடைகளில் தேங்கி நிற்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கழிவு மற்றும் மழைநீர் ஓடும் வகையில் வழிவகை ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.