உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கோழி பண்ணையில் வேலை பார்த்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Published On 2023-10-20 07:54 GMT   |   Update On 2023-10-20 07:54 GMT
  • 6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.
  • கோழிப்பண்ணை நிர்வாகத்தினரை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், குண்டடம், பெல்லம்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக திருப்பூர் சைல்டு லைனுக்கு புகார் வந்தது.இதனையடுத்து சைல்டு லைன் மற்றும் குண்டடம் போலீசார், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்வதும், குடும்பத்தை சேர்ந்த 13 முதல், 17 வயது உடைய 6 பேர் பள்ளிக்கு செல்லாமல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.வேலைக்கு அனுப்ப கூடாது என்றும், பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தி பெற்றோரிடம் எழுதி வாங்கியும் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். மேலும் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மீது தொழிலாளர் நல அதிகாரிகள் மற்றும் குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News