பல்லடத்தில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
- ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட் முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தனர்.
- நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் :
ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட் முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்த நிலையில் திடீரென பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,மேலும் நடைபாதை வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்களை பயன்படுத்தி நகராட்சி வாகனத்தில் கொண்டு செல்ல முற்படும்போது சாலை ஓர நடைபாதை வியாபாரிகளுக்கும் பல்லடம் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முக்கியமான பண்டிகை காலங்களில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்து பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடைபாதை வியாபாரிகளுடன், நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.