உள்ளூர் செய்திகள்

நில மட்ட நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த காட்சி.

பல்லடம் பகுதியில் ரூ.5.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2023-07-02 07:03 GMT   |   Update On 2023-07-02 07:03 GMT
  • பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.
  • பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

பல்லடம்:

பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முருகன் நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 4.85 கோடி மதிப்பிலான 9 சாலை பணிகளை துவக்கி வைத்தார். பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ரூ.31.21 லட்சம் மதிப்பில் 5 சாலை பணிகளை துவக்கினார். ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நில மட்ட நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

பல்லடம் வட்டார பகுதிகளில் குடிநீர் தேவைக்காக பில்லூர் அணையிலிருந்து சூலூர் பேரூராட்சி வழியாக பல்லடம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும்திட்டத்தினை முதலமைச்சர் முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து போது கொண்டு வந்தார்கள். தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பில்லூர் 3-ம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணி நடைபெற்று வருவதால், மீண்டும் இத்திட்டத்தினை பல்லடம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும். இதன் மூலம் பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம்,பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிர மணியம்,ஊராட்சி மன்ற தலைவர்கள் புனிதா சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News