உடுமலை பகுதியில் கம்பு அறுவடை பணிகள் தீவிரம்
- கோடை காலத்தில் கம்பங்கூழ் உட்பட கம்பு சார்ந்த உணவுப்பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்து நல்ல விலை கிடைக்கும்.
- கம்பு குறைந்த நீர் மற்றும் மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரும்.
உடுமலை :
உடுமலை பகுதியில் பரவலாக சிறுதானிய சாகுபடி இறவை பாசனத்துக்கு மாசி மற்றும் சித்திரை பட்டத்தில், சாகுபடி செய்யப்படுகிறது.கோடை காலத்தில் கம்பங்கூழ் உட்பட கம்பு சார்ந்த உணவுப்பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்து நல்ல விலை கிடைக்கும். அதை அடிப்படையாக கொண்டு உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கம்பு பரவலாக சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:- கிணற்றுப்பாசன சாகுபடியில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு ரக விதைகளே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கம்பு குறைந்த நீர் மற்றும் மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரும். மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப்பொருள்களை பெற்றுள்ளது.கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். எனவே இடைபட்டத்திலும் இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர் என்றனர்.