உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சக்கரபாளையம் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நாளை நடக்கிறது

Published On 2023-05-10 11:11 GMT   |   Update On 2023-05-10 11:11 GMT
  • பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.
  • பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை பூஜை நடைபெறுகிறது.

காங்கயம் :

முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு பகவதி அம்மனுக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு 8 மணிக்கு பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. விழாவில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழா நிறைவாக (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மறு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News