உடுமலை பகுதிகளில் ரூ.400க்கு நாவல்பழம் விற்பனை
- தமிழகத்தில் கோடை காலம் முடிவுறும் நிலையில் தற்போது நாவல் பழம் மற்றும் பலா பழம் சீசன் துவங்கியுள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாவல்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
உடுமலை :
தமிழகத்தில் கோடை காலம் முடிவுறும் நிலையில் தற்போது நாவல் பழம் மற்றும் பலா பழம் சீசன் துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை ,பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாவல்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கிருந்து வரும் நாவல் பழங்கள் ஆயக்குடி மொத்த விற்பனை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கிலோ ஒன்றுக்கு 400க்கு விலை போகிறது. இதேபோல் ஹைபிரிட் என்று சொல்லப்படும் நாவல் கனிகள் ஆந்திரா ,கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பழங்கள் ரூ. 500 வரை விலை போகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கொதிப்புஉள்ளவர்களுக்கு மருத்துவ பயன் அளிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.