உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை

Published On 2023-03-20 07:35 GMT   |   Update On 2023-03-20 07:35 GMT
  • மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது.
  • குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது.

தாராபுரம் :

தாராபுரம், அலங்கியம், தளவாண்பட்டிணம், சந்திராபுரம், கொங்கூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடக்கிறது. மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்கிறார்கள்.

அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். திருப்பூர், திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது. அதனை வாங்க மேற்கூறிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் ஏலம்போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News