உள்ளூர் செய்திகள்

திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

சாலையோர கடைகளால் வியாபாரம் பாதிப்பு: திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் விவசாயிகள் நள்ளிரவு திடீர் போராட்டம்

Published On 2022-06-29 08:52 GMT   |   Update On 2022-06-29 08:52 GMT
  • தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்
  • உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என புகார்.

திருப்பூர் :

திருப்பூர்-பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது . இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்கள் தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வெளிப்புறமாக பல்லடம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து காய்கறிகளை வியாபாரம் செய்வதால் உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையோரங்களில் வாங்கி செல்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதாகவும் , அதேபோல் உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் 8 மணிக்கு முன்பாக உழவர்சந்தை நேரத்திலேயே செயல்படுவதாலும் விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி காய்கறிகளை சாலையில் கொட்டி போரா ட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். இதனை கேள்விப்பட்டு நள்ளிரவிலேயே மாநகராட்சி அலுவலர்கள் , வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரம் கடை அமைக்காத வகையில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும் உழவர் சந்தையின் வசதிகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் போராட்ட த்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News