உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்ட 30 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்' - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2023-05-25 07:40 GMT   |   Update On 2023-05-25 07:40 GMT
  • தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2 பேர் பலியாகினா்.
  • 4 குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூர் :

தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2பேர் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக முழுவதும் சட்டவிரோதமாக செயல்படுகிற பாா்கள் மற்றும் போலி மது விற்பனை செய்கிற பாா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டத்திலும் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சோ்ந்த அதிகாரிகள் என 4 குழுவினா் பிரிந்து சென்று அவிநாசி, தாராபுரம், காங்கேயம், திருப்பூா் உள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பாா்களில் விற்பனை செய்யப்படுகிற மது வகைகள் மற்றும் பாா்கள் சட்டப்படியும், விதிகளுக்கு உள்பட்டும் இயங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதிகாரிகள் சோதனைகளுக்கு வருவது அறிந்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாா்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் திரும்பி வந்தனா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 குழுக்களாக சென்று சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் பாா்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்தோம். இதில் 30 பாா்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பல்வேறு பகுதிகளில் பாா்கள் திறக்கப்படவில்லை. இந்த பாா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாா்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Tags:    

Similar News