கோவில்வழியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு - மேயர், ஆணையாளர் ஆய்வு
- உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில்வழி பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவில்வழி பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் தொடங்கும்போது, பஸ்களை வேறு இடத்தில் இயங்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கோவில்வழி பஸ் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். 2 இடங்கள், தற்காலிகமாக பஸ்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வினோத், தி.மு.க. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.