உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சுயவேலைவாய்ப்பு கடன் திட்ட சிறப்பு முகாம் வருகிற 11-ந் தேதி முதல் நடக்கிறது

Published On 2022-11-05 05:14 GMT   |   Update On 2022-11-05 05:14 GMT
  • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
  • கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ அலுவலகம் மூலம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசின் சுயவேலைவாய்ப்பிற்கான கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் குறித்த தொழில் விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 11-ந் தேதி தாராபுரம் , 14-ந் தேதி பல்லடம், 15-ந் தேதி உடுமலைப்பேட்டை, 16-ந் தேதி பொங்கலூர், 19-ந் தேதி அவிநாசி, 21-ந் தேதி மடத்துக்குளம், 23-ந் தேதி, வெள்ளகோவில், 24-ந் தேதி குண்டடம், 25-ந் தேதி காங்கேயம், 28-ந் தேதி ஊத்துக்குளி, 29-ந் தேதி மூலனூர், 30-ந் தேதி குடிமங்கலம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கடன் பெற விரும்புவோர் ஆதார் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வர்த்தகப் பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News