ரூ.1.20 கோடியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை செல்வராஜ் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, நிழற்கூரை, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.காலேஜ்ரோடு அய்யப்பன் கோவில் முன் ரூ.31 ½லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமிபூஜை நடந்தது. தெற்குதொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.
இது போல் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பெரிச்சிப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, பெரியதோட்டம் மெயின் ரோடு பகுதியில் ரூ.26½ லட்சத்தில் நிழற்கூரை அமைப்பதற்கான பூமிபூஜை, கோம்பை தோட்டம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை, பெரியதோட்டம்முதல் வீதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமையம்ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளைதொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம்மதிப்பில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ்,திலக்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.