உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி சிவசேனா கண்டனம்

Published On 2023-06-17 06:41 GMT   |   Update On 2023-06-17 06:41 GMT
  • கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க கூடாது.
  • தமிழக ஆளுநருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

திருப்பூர் :

சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க கூடாது என அறிவித்த தமிழக ஆளுநருக்கு சிவசேனா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.ஒரு அரசாங்க ஊழியர் இது போன்ற ஒரு கிரிமினல் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவரது பணியை தொடர முடியும் என சட்டம் உள்ளது.

அது போல செந்தில் பாலாஜி சட்டப்படி சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டும்.ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி என்பது சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.இதனை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News