உள்ளூர் செய்திகள்

கண்காட்சியை கே.எம். நிட்வேர் குழும தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் ஸ்மைலி ஈவண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அருண் மற்றும் பலர் அருகில் உள்ளனர்.

திருப்பூரில் 'ஸ்மைலி எக்ஸ்போ' வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி தொடக்கம்

Published On 2022-09-16 05:05 GMT   |   Update On 2022-09-16 05:05 GMT
  • கண்காட்சியில் 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
  • கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

திருப்பூர் :

திருப்பூரை சேர்ந்த ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'ஸ்மைலி எக்ஸ்போ' என்ற பெயரில் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் தொடங்கியது.

இந்த கண்காட்சியை கே.எம்.நிட் வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஸ்ரீசக்தி சினிமாஸ் நிறுவனர் சுப்பிரமணியம், கிட்ஸ் கிளப் நிறுவன தலைவர் மோகன் கார்த்திக் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

எம்.எஸ்.ஆர். ஆயில் மில்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், எம்.எஸ்.ஆர்.கிளினிக் டாக்டர் ராஜா, விருக்ஷம் பிரகனன்சி கேர் நிறுவனர் அனுபமா குமார் விஜயானந்த், லக்கி கேர்ள் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி, ஹே தயா ஆர்ட் கேலரி நிறுவனர் ரமா ராஜேஷ், ஸ்டைல் ஓஷன் மற்றும் லைம்லைட் நிறுவனர் வைஷ்ணவி, குயினோவா நிறுவனர் சாமு ஜெயஸ்ரீ, லைம்லைட் நிறுவனர்கள் குஷ்பு, ரேவதி, தீபா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு வந்தவர்களை ஸ்மைலி ஈவண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அருண் வரவேற்றார்.

கண்காட்சியில் பர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைகள், டெக்ஸ்டைல் பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கட்டிட பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

சிறுவர்களுக்கான விளையாட்டு கூடங்கள், குடும்பத்தோடு உண்டு மகிழ உணவு கூடங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு வாடிக்கையாளர்களை குதுகலப்படுத்த விஜய் டி.வி. புகழ் அறந்தாங்கி நிஷா இன்றும் (வெள்ளிக்கிழமை), ராமர் நாளையும் (சனிக்கிழமை) கலந்து கொள்கிறார்கள். கண்காட்சி நேரத்தில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், திறமையான வாடிக்கையாளரை தேர்வு செய்து எல்.ஈ.டி. டி.வி. இலவச பரிசாக வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள், பலகுரல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தினமும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கிறார்கள். ரோட்டரி உறுப்பினர்கள், பி.என்.ஐ. அமைப்பு உறுப்பினர்கள், ஜெ.சி.ஐ. உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

Tags:    

Similar News