உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

சொக்கனூர் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நாளை நடக்கிறது

Published On 2023-02-02 10:16 GMT   |   Update On 2023-02-02 10:16 GMT
காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

திருப்பூர்:

அவினாசி அருகே சொக்கனூரில் அமைந்துள்ள செங்குந்தர்களின் குல தெய்வமான தேவி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று 1 -ந்தேதி கணபதியாகம், நவகிரகஹோமம், கோபூஜை, தீர்த்தம் எடுக்க ஆற்றுக்கு செல்லுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, திருமண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், காப்பு அணிவித்தல், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம்,திரவ்யாகம், முதற்கால யாகபூஜை, தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.

இன்று காலை சிவாச்சரியார் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, திரவ்ய யாகம், 3-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. இரவு 10மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

நாளை 3ந்தேதி கும்பாபிஷேகத்தையொட்டி காலை 5மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், திரவியயாகம், நான்காம் கால பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடக்கிறது.

காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து காலை 10மணிக்கு மேல் தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை நாட்டாமைக்காரர் கந்தசாமி, பெரிய தனக்காரர் கொண்டப்பன், நிர்வாக குழு தலைவர் ரமேஷ் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

கும்பாபிஷேகம் மகா சந்நிதானம் வேதசிவாகம சிரோன்மணி ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் சண்முக சிவாச்சாரியார் சுவாமிகள், ஐராவதீஸ்வரர் சிவம் ஆகியோரின் சர்வசாதக சிறப்போடு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News