சாமளாபுரத்தில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
- காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.
- 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மங்கலம் :
சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.
இதில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.க.சாந்தகுமாரி மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பூங்கொடிசண்முகம் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.