பல்லடம் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
- கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செம்மிபாளையம் வட்டார சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்தினர்.
இந்த முகாமிற்கு பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர். ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி அனைவரையும் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் கரைப்புதூர் கார்த்திகா மகேஸ்வரன் கணபதி பாளையம் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு மெம்பர்கள், சுகாதாரத் துறையினர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.