ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- தேர்வு செய்ய உருவாக்க விடுதி மேலாண்மை அமைப்பு என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக் குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்படும்.
திருப்பூர் :
2023 -– 2024ம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய உருவாக்க விடுதிமேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள்,வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மாணவர் சேர்க்கைவிதிமுறைகளை பின்பற்றி புதிய மாணவர் சேர்க்கை நடத்திட ஏதுவாக திருப்பூர்மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி-கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும்மாணவ- மாணவிகள் 30.6.2023 வரையிலும் https://tnadw.hms.in என்கிறஇணையதளத்தில் நேரடியாகவோ சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைய வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மாவட்டஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.