பூஜ்ஜிய நிழல் தின நிகழ்வை கண்டுகளித்த மாணவர்கள்
- ஒரு பொருளின் நேர் மேலாக 90 டிகிரி உச்சியில், சூரியன் வரும் நிகழ்வு.
- கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக கண்டறியப்பட்டது.
உடுமலை :
சூரியனால் ஏற்படும் ஒரு பொருளின் நிழல் காலையில் அதிக நீளத்தோடு இருந்து உச்சி நேரத்தில் குறையும். பின், சூரியன் மறையும் வரை மீண்டும் நீள்கிறது. அதேநேரம், ஓராண்டில் இரு முறை சூரியனால் ஏற்படும் நிழலை காண இயலாது. அவ்வகையில் ஒரு பொருளின் நேர் மேலாக 90 டிகிரி உச்சியில், சூரியன் வரும் நிகழ்வு, பூஜ்ய நிழல் தினமாக அழைக்கப்படுகிறது.அந்த நிகழ்வு உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக கண்டறியப்பட்டது.
குறிப்பாக ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எளிய பொருட்களின் வாயிலாக பூஜ்ய நிழலை கண்டு களித்தனர்.இதேபோல என்.வி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மைதானத்தின் வட்ட வடிவில் நின்று பூஜ்ய நிழலை கண்டறிந்தனர்.இதன் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:-
பூஜ்ஜிய நிழலை கண்டறியும் வகையில் ஒரு பொருளைக்கொண்டு சரியாக பிற்பகல் 12:23 மணிக்கு, உற்று நோக்கப்பட்டது.அப்போது சூரியனால் ஏற்பட்ட பொருளின் நிழல் நேர்குத்தாக கீழே விழுந்தது. அப்போது, பொருளின் நிழல் தென்படவில்லை. மாணவர்களிடையே அறிவியல் திறனை மேம்படுத்தவும், வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் ஊக்கப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.