உள்ளூர் செய்திகள்

ஆய்வு செய்த காட்சி.

பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறை பணிகள் குறித்து சப் கலெக்டர் ஆய்வு

Published On 2023-08-03 10:48 GMT   |   Update On 2023-08-03 10:48 GMT
  • அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும்
  • மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார்

பல்லடம்:

பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு குறித்து சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்லடம் நகராட்சி ஆணையாளர், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பல்லடம் வட்டார பகுதியில் அதிக விபத்துக்கள் நேரும் இடங்களை பார்வையிட்ட அவர் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பல்லடம் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்ட அவர் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுப் பணிக்கு வந்த சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தாலுகா அலுவலகத்தில் இருந்த பழைய குப்பைகளை தீ வைத்து எரித்தனர். அதில் பொது மக்களின் மனுக்களும் இருந்ததாக சிலர் கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுகள் குறித்து பல்லடம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News