ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு பகுதியில் 30 வீடுகளில் சுவர்களில் திடீர் விரிசல் - விஜயகுமார் எம்எல்ஏ நேரில் ஆய்வு
- திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
- மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு ஏடி காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கு ஏராளனோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ.டி. காலனியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எதற்காக திடீரென வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி அன்பழகன், ராசப்பன் நிர்வாகிகள் காளிமுத்து, யுவராஜ், ராமசாமி, ராம்குமார், சையது, சாமிநாதன், நல்லசாமி, மூர்த்தி, கொண்டான் உள்ளிட்டோரும் பொதுமக்களும் இருந்தனர்.