உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உச்சநீதிமன்ற சிறப்புக்குழு ஆய்வு - அரசு ஆஸ்பத்திரிகளை தயாராக வைக்க உத்தரவு

Published On 2023-06-03 10:22 GMT   |   Update On 2023-06-03 10:22 GMT
  • டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • அனைத்து வார்டுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

திருப்பூர்:

தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க சுகாதார துறை சார்பில், டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக விபத்தில் சிக்கி வருவோருக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் விபத்து உயிரிழப்புகள் குறைந்தன.அரசால் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற சிறப்புக்குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வது வழக்கம்.

இம்மாதம் உச்சநீதிமன்ற சிறப்புக்குழு தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், செயல்படுத்தப்படும் டாய் திட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், டாய் வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்யவும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து வார்டுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News