திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா6-ந் தேதி நடக்கிறது
- திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் நடைபெறுகிறது.
திருப்பூர்:
திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் வருகிற 6-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு திருப்பூா் கம்பன் கழகத்தலைவா்- ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் வரவேற்புரையாற்றுகிறாா். இதைத்தொடா்ந்து, கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தலைமையில் கம்பன் காவியத்தில் கற்போா் நெஞ்சைப் பெரிதும் நெகிழச் செய்பவர் அயோத்தி பரதனே, கிஷ்கிந்தை வாலியே, இலங்கை கும்பகா்ணனே என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.
இதில், 'அயோத்தி பரதனே' என்ற தலைப்பில் சென்னை கோ.சரவணன், ஈரோடு வளா்மதி ஆகியோரும், 'கிஷ்கிந்தை வாலியே' என்ற தலைப்பில் திருச்சி விஜயசுந்தரி, ராஜபாளையம் உமாசங்கா் ஆகியோரும், 'இலங்கை கும்பகா்ணனே' என்ற தலைப்பில் பெருந்துறை ரவிகுமாா், திருப்பூா் பட்டயக்கணக்காளா் ஜெய்வநாயகி ஆகியோரும் பேசுகின்றனா்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான போட்டிகள், கருத்தரங்கமும் நடைபெறுகின்றன.
முடிவில் கம்பன் கழக துணைச் செயலாளா் கெளசல்யா வேலுசாமி நன்றி கூறுகிறார்.