திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது
- இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
- தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
திருப்பூர் :
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.