உள்ளூர் செய்திகள்

தொழில் நிதிக்கான ரூ.10 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கியபோது எடுத்தபடம்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் நிதி கலெக்டர் வழங்கினார்

Published On 2023-08-01 05:17 GMT   |   Update On 2023-08-01 05:20 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
  • மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து முறையிட்டனர்.

மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிதிக்கான ரூ.10 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News