ஐ.எம்.ஏ., அவினாசி டெக்ஸ்சிட்டி தொடக்க விழா நாளை மறுநாள் நடக்கிறது
- திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி ஓட்டலில் வருகிற 16-ந் தேதி மாலை 5மணிக்கு நடக்கிறது.
- மருத்துவர் தினத்தையொட்டி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அவிநாசி :
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்(ஐஎம்ஏ) அவிநாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி ஓட்டலில் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5மணிக்கு நடக்கிறது.
நிகழ்ச்சியில் ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி., தலைவர் செந்தமிழ் பாரி தலைமை தாங்குகிறார். ஐ.எம்.ஏ., அவினாசி டெக்ஸ்சிட்டி செயலாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசுகிறார். முதன்மை விருந்தினர்களாக செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், திருப்பூர் ஜே.டி.எம்.எஸ்., கனகராணி, ஐ.எம்.ஏ.,டி.என்.எஸ்.பி., செயலாளர் தியாகராஜன், பாஸ்ட் நேஷனல் ஐ.எம்.ஏ., தலைவர் ஜெயலால், துணை தலைவர் பிரகாசம், நேஷனல் ஐ.ஏம்.ஏ., துணை தலைவர் குணசேகரன், டாக்டர் அபுல் ஹாசன், என்.எச்.பி., சேர்மன் கார்த்திக் பிரபு, டாக்டர் கருணா ஆகிேயார் கலந்து கொள்கின்றனர். மேலும் டி.எம்.எப். ஆஸ்பத்திரி இயக்குனர் தங்கவேல், ஸ்ரீகுமரன் மருத்துவமனை சேர்மன் செந்தில்குமரன், டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐஎம்ஏ., அவினாசி டெக்ஸ்சிட்டி தலைவர் அஜாஸ் அன்சாரி, செயலாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணை தலைவர் ஹரி வீர விஜயகாந்த், இணை செயலாளர் நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் முகமது முபாரக் அலி, அட்வைசரி போர்டு டாக்டர்கள் ஜெயராமகிருஷ்ணன், ரமணி, ராஜ்குமார், சரவணன், பிரகாஷ் ஆகியோர் செய்துள்ளனர். முடிவில் ஸ்டேட் கவுன்சில் உறுப்பினர் பொம்முசாமி நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியில் மருத்துவர் தினத்தையொட்டி விருதுகள் வழங்கப்பட உள்ளது.