உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்தத கன்றுக்குட்டியை படத்தில் காணலாம்.

காங்கயம் அருகே மர்மமான முறையில் இறக்கும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-04-28 04:40 GMT   |   Update On 2023-04-28 04:40 GMT
  • கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர்.
  • சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும்.

காங்கயம் :

காங்கயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. எனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைதான் கன்று குட்டியை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் சந்தேகம் அடைந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்றுக்குட்டியின் உரிமையாளர் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர். மேலும் கன்றுக்குட்டியின் உடல் பகுதியில் சிறுத்தையின் கால் நகங்களோ அல்லது பற்களின் தடயங்கள் ஏதும் இல்லை. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களும் இல்லை. மேலும் கன்றுக்குட்டியின் கால் பகுதியில் சிறிய அளவிலான பற்களின் தாரைகள் உள்ளது.இது நாய்களின் பற்கள் போல் உள்ளது. இது வெறி நாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டு உயிரிழந்து அதை கன்றுக்குட்டியின் உரிமையாளர் 3 அல்லது 4 நாட்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும். கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதாக இருந்தால் அங்கு இருந்து வேறு பகுதிக்கு கன்று குட்டியை சிறுத்தை கடித்து இழுத்து சென்று இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே வெறிநாய்கள் கடித்துதான் கன்றுக்குட்டி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News