உள்ளூர் செய்திகள்

ஆதரவற்றவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றிய காட்சி. 

திருப்பூரில் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்த போலீசார்  

Published On 2022-12-07 07:17 GMT   |   Update On 2022-12-07 07:17 GMT
  • தன்னார்வ தொண்டு அமைப்பினர் உதவியுடன் மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை போலீசார் மீட்டனர்.
  • திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 திருப்பூர் :

 தமிழகம் முழுவதும் கோவில்கள் முன்பும், சாலைகளில் ஆங்காங்கே இருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்குமாறு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூர் குமரன் சாலை,ரெயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் , அதே போல் கோவில்கள் முன்பும், கோவில்களை சுற்றியுள்ள சாலைகளிலும், சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்றவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பினர் உதவியுடன் மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை போலீசார் மீட்டனர்.

இப்பணிக்காக போலீசார் வந்தபோது அவர்களை பார்த்ததும் கோவில்கள் முன்பு இருந்தவர்கள் ஓட முயற்சித்தனர். அவர்களை பிடித்து அறிவுரைகள் கூறி வாகனத்தில் ஏற்றினர்.

பின்னர் அவர்களைஆம்புலன்சுகள் மூலமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News