அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு அவினாசியில் நாளை தொடங்குகிறது
- இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
- 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அணைபுதூர் டீ-பப்ளிக் பள்ளியில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்ப பணி, கிளர்க்,ஸ்டோர் கீப்பர்உள்ளிட்ட பதவிகளுக்கு 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கோவை,ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல்,மதுரை,தேனி ,நீலகிரி,நாமக்கல்,தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம் என 11 மாவட்டங்களில் இருந்து தினமும் 3 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் முகாம் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்தார். முகாம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.