உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுத்து செல்லும்லாரிகளால் பழுதாகும் சாலைகள்

Published On 2023-08-06 06:13 GMT   |   Update On 2023-08-06 06:13 GMT
  • ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன.
  • தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.

உடுமலை:

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.இதைத்தொடர்ந்து லாரிகளில் விவசாயிகள் மண் எடுத்துச் செல்கின்றனர். தினசரி ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன. தளி வழியாகத்தான் ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன.

லாரிகளால் இந்த குழாய்கள் உடைந்து சேதம் ஆகின்றன. மேலும் சாலைகளும் விரிசலாகி பழுதாகின்றன. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ,அணையில் இருந்து இடதுபுறம் மொடக்குப்பட்டி சாலை வழியாக செல்லலாம். வலதுபுறம் ஜல்லிப்பட்டி வழியாகவும் உடுமலைக்கு செல்லலாம். தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News