உள்ளூர் செய்திகள்
காங்கயம் நகர பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரம்
- காங்கயம் நகர பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது.
- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.
காங்கயம் :
காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நகரப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ள பகுதிகள், தினசரி மார்க்கெட்டுகள், பஸ் நிலைய வளாகங்கள், கடைவீதி பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் மூலம் தெரு தெருவாக சென்று கொசு மருந்து புகை அடிக்கும் பணிகள் நடைபெற்றது.